டொனால்டு டிரம்ப்: இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபரின் நோக்கம் என்ன? அவருக்கு என்ன லாபம்

விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக பயணிக்க உள்ள டிரம்பை ஆயிரக்கணக்கான மக்கள் சாலை ஓரங்களில் இருந்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை டிரம்ப் திறந்து வைக்கிறார்.


அகமதாபாத்தில் டிரம்ப் இருக்கவுள்ள மூன்று மணி நேரத்திற்காக மொத்தம் 800ல் இருந்து 850 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படும் என்று குஜராத் அரசு அதிகாரிகள் கணக்கிட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது



மந்தநிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கும் சூழலின் மத்தியில்தான் டிரம்ப் வருகை இருக்கிறது.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு இது ஒர் அரசியல் ஆதாயமாக அமையும் என்கிறார் ப்ரூக்கிங்க்ஸ் திங்-டேங் நிறுவனத்தின் இயக்குநர் தன்வி மதன்.


"அனைத்து புகைப்படங்களிலும் உலகின் மிக சக்தி வாய்ந்த தலைவர் ஒருவருடன் மோதி இருப்பார்" என்கிறார் அவர்.


இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய கொள்கையின் ஒரு பகுதிதான் அவர் இந்தியா வருவது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.