விளக்கம் அளிக்கவே பிரதமர் மகாதீர் நேரம் கேட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன

சுதந்திர மலேசியாவின் வரலாற்றில் முதன் முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இதையடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள் புதிய மலேசியாவை உருவாக்குவோம் என்றனர்.


ஆனால் அண்மைய நிகழ்வுகளைக் காணும்போது அங்கு புதிய ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தான் தொடங்கி உள்ளனவோ? எனும் சந்தேகம் எழுவதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


நாளை மலேசியாவின் மாமன்னரை (அகோங்) நேரில் சந்திக்க பிரதமர் மகாதீர் நேரம் கேட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக இந்தச் சந்திப்பு என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும் புதிய ஆட்சி அமைப்பது குறித்து மாமன்னரிடம் விளக்கம் அளிக்கவே பிரதமர் மகாதீர் நேரம் கேட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.